முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்.23ஆம் தேதி நடக்க உள்ள தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்த படிவங்களை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் ரூ.50 கட்டணத்துடன் சேர்த்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.