தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று பிற்பகல் முடிவுகள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெறாத பதிவு எண்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்றும், மதிப்பெண்கள் பட்டியலை மாணவர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் காணலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 14 முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை 11 ஆ வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.