சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளையும் வென்றது. திரையுலகினர் பலரும் இந்த திரைப்படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் மாமனிதன் திரைப்படம் ஒரு சர்வதேச விருதை பெற்றிருக்கின்றது. அமெரிக்காவில் நடந்த 29-வது சரோனா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் என்ற விருதை பெற்றிருக்கின்றது. இதைத்தொடர்ந்து 56வது ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழா வருகின்ற ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.

இந்த விழாவில் மாமனிதன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. இது பற்றி இயக்குனர் சீனு ராமசாமி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த விழாவில் இளையராஜா பங்கேற்று சிறப்பித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். கோல்டன் குளோப் அவார்ட்-ஐ விட வயதில் மூத்த திரைப்பட பண்ணைபுரத்தில் அவர் தனித்த இடத்தில் எடுத்த திரைப்படம் என்பதாலும் அதே தேதியில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட திரையிடலில் நான் இருப்பதனால் இளையராஜா பங்கேற்க வேண்டி கொள்வதாக பதிவிட்டு இருக்கின்றார்.