அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, தற்போது ஆட்சி செய்து வரும் திமுகவிற்கு பொய்தான் மூலதனம். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக இயங்கி வருகின்றன. முறைகேடாக நடக்கும் பார்களின் கலால் வரி செலுத்தாமல்,  மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. முறைகேடு பார்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடி பணம் திமுக மேலிடத்திற்கு செல்கிறது.

மீனவர்களின் வாக்குகளை பெறவே கச்சத்தீவு விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். ஆட்சியை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் தான் கச்சதீவை மீட்போம்  என முதல்வர் பேசுகிறார். கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்க மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது திமுக முயற்சி செய்யவில்லை. 2011 – 21 வரையிலான பத்தாண்டு கால ஆட்சியை பொற்காலம் என மக்கள் கொண்டாடினர். காவேரி நீர் பிரச்சினைகள் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று அரசாங்கம் அதிமுக அரசாங்கம் என தெரிவித்தார்.