ஜப்பான் நாட்டின் சாலைகள் மற்றும் பொது இடங்களின் தூய்மையைக் கண்டு வியந்து இந்தியப் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ‘சோயாபீன் கப்பிள்’ என்ற கணக்கைப் பகிரும் இந்தியப் பெண் ஒருவர், டோக்கியோ ரயில் நிலையத்தில் நின்றபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் அன்று முழுவதும் சுமார் 10,000 படிகள் (10,000 steps) நடந்த பிறகும், தனது வெள்ளை நிற காலணிகளில் ஒரு துளி கூட அழுக்கு படியவில்லை என ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும், தனது காலணிகளில் இருக்கும் அந்தச் சிறு அழுக்கு கூட இந்தியாவிலிருந்து வரும்போது படிந்ததுதான் என்றும், ஜப்பான் சாலைகள் கண்ணாடி போல மின்னுகின்றன என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், ஜப்பானின் பொதுநல ஒழுக்கத்தைப் பாராட்டியுள்ள அதே வேளையில், இந்தியாவைத் தாழ்வாகப் பேசியதாக அந்தப் பெண்ணைக் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
