கரூர் மாவட்டத்திலுள்ள லட்சுமணம்பட்டியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெயரில் இருக்கும் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு சுயநிதி முன்னுரிமை திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2010-ஆம் ஆண்டு முத்துகிருஷ்ணன் அந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்த பெரியசாமியிடம் பத்தாயிரம் முதலீடு கட்டணமாக செலுத்தினார்.

அப்போது விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க பெரியசாமி 1000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து முத்துகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்துகிருஷ்ணனை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் முத்துகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ல், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.