கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தக்கட்டி காலனியில் கூலி வேலை பார்க்கும் திம்மராயன்(43) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு திம்மராயன் அஞ்செட்டி அருகே இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத காது கேளாத மூன்று வயது மாற்றுத்திறனாளி சிறுமையை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்தவர்கள் சிறுமியை எங்கு அழைத்துச் செல்கிறார் என கேட்டனர். அதற்கு அவரது தாயிடம் அழைத்து செல்கிறேன் என திம்மராயன் கூறியுள்ளார்.

ஆனாலும் சந்தேகத்தில் சிலர் திம்மராயனை பின்தொடர்ந்து சென்றனர். அப்போதுதான் திம்மராயன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் திம்மராயனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் திம்மராயனுக்கு 7 ஆண்டுகள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.