வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரிடம் இந்து அர்ச்சகர் ஒருவர் ‘பூஜை’ செய்ததற்காக ₹1000 பணம் கேட்டு அடம் பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்தப் பயணி தன்னிடம் இருந்த ₹100 பணத்தைக் கொடுக்க முன்வருகிறார். ஆனால், அந்த அர்ச்சகர் அதை அலட்சியமாகத் தள்ளிவிட்டு, “ஆயிரம் ரூபாய் வேண்டும்” என்று பிடிவாதமாகக் கட்டாயப்படுத்துகிறார். பக்தி என்ற பெயரில் நடக்கும் இந்த பகல் கொள்ளை, நம் நாட்டின் மரியாதையை உலக அளவில் அசிங்கப்படுத்துவதாகப் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

​தர்மத்தை வளர்க்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களே, இப்படிப் பணத்திற்காகச் சுற்றுலாப் பயணிகளைச் சங்கடப்படுத்துவது பெரும் அவமானமாகப் பார்க்கப்படுகிறது. “இது தர்மம் அல்ல, தாதா வேலை” என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். வெளிநாட்டவர் அந்த அர்ச்சகரின் பேராசையை நேரலையிலேயே தோலுரித்துக் காட்டியது, இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.