நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் பணிக்கு வருவோர் குறித்து காலை மற்றும் மதியம் என் எம் எம் எஸ் எனப்படும் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பெரும்பாலான ஊராட்சிகள் குடும்பத்திற்கு வழங்கும் சராசரி வேலை நாட்கள் மிக குறைவாக உள்ளது.

இது தொடர்ந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து ஊராட்சிகளிலும் குக்கிராமங்களிலும் தினசரி வேலை நடைபெற வேண்டும் எனவும் கட்டாயமாக சமுதாயப் பணிகள் நடக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் முரண்பாடுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.