பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள்  மற்றும் வீட்டு விசேஷங்கள் எதுவுமே நடப்பதே இல்லை. இந்த நேரத்தில், பொருள்களின் விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி வழங்குவது கடைகளின் வழக்கம். ஆரம்பத்தில் சிறிய தள்ளுபடிகளை வழங்கிய கடைகள், இப்போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், அதோடு நிற்காமல் 100% கேஷ் பேக் என அதிரடிச் சலுகைகளை வழங்கி எதை வாங்குவது, எதை விடுவது என நம்மைத் திக்குமுக்காடச் செய்துவிடுகின்றன.

இப்படி ஆடி மாதம் துணிக்கடை, ஹோட்டல் ஆஃபர்  கொடுத்து பார்த்திருப்பீர்கள். ஆனால், சற்று வித்தியாசமாக திண்டுக்கலில் பல் மருத்துவர் ஒருவர் ஆஃபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் வெறும் ரூ.149க்கு பல் எடுத்தல், பல் சொத்தை அடைத்தல் உட்பட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.