திமுகவின் பாவத்தையும் சுமப்பதற்குப் பாஜக தயாராக உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘அமித் ஷா தொடங்கி வைத்துள்ளது, பாத யாத்திரை அல்ல பாவ யாத்திரை’ என்று விமர்சனம் செய்திருந்தார். இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில்,  முதல்வர் ஸ்டாலின் சேர்த்து வைத்துள்ள பாவத்தை போக்க உகந்த இடம் ராமேஸ்வரம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு திமுகவின் பாவத்தின் தாக்கம் இருக்கக்கூடாது என கூறிய அவர், பாத யாத்திரையை கண்டு முதல்வர் ஸ்டாலினும், அவரது மகனும் எதற்காக பதற்றமடைகிறார்கள். தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என விமர்சித்துள்ளார்