தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் 326 அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு தமிழில் 100க்கு 138 மதிப்பெண் வந்துள்ளதால், தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த தனித்தேர்வரான அந்த மாணவிக்கு தமிழில் அதிக மதிப்பெண் வந்ததோடு, 600க்கு 514 மதிப்பெண்கள் எடுத்தும் 4 பாடங்களில் தோல்வி என முடிவுகள் வந்துள்ளது. இதனால் உயர்கல்வியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.