ஜோமேட்டோவின் அங்கமான பிளிங்கிட் நிறுவனம், ‘ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உங்கள் வீட்டு வாசலில் பொருட்கள் இருக்கும்’ என்ற வாக்குறுதியை வழங்கி வந்தது.
இதைக் கேட்டு மற்ற நிறுவனங்களான செப்டோ (Zepto) மற்றும் இன்ஸ்டாமார்ட் (Instamart) ஆகியவையும் போட்டிக்குத் தயாராகின. ஆனால், இந்த அதிரடி ஆஃபர் இப்போது ‘டாட்டா’ காட்டி விடைபெற்றுள்ளது.
இதற்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணம், மத்திய அரசின் தலையீடு மற்றும் டெலிவரி ஊழியர்களின் தொடர் போராட்டம்தான். “10 நிமிடத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்ற நெருக்கடியால், ஊழியர்கள் சாலை விதிகளையும், தங்கள் உயிரையும் பணையம் வைத்து அதிவேகமாகச் செல்ல வேண்டியுள்ளது” என்ற புகார்கள் வலுத்தன.
இது ஊழியர்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, பிளிங்கிட் நிறுவனம் ’10 நிமிட டெலிவரி’ என்ற வாசகத்தை நீக்கிவிட்டு, இப்போது “30,000+ பொருட்கள் உங்கள் வீட்டு வாசலில்” என்ற புதிய விளம்பர உத்தியைக் கையில் எடுத்துள்ளது.
பிளிங்கிட்டைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இதே முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆன்லைன் ஷாப்பிங் உலகில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
