தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் பிச்சை(73) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பிச்சைக்கு 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
