கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி (DGP) சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் இந்த வழக்கு விசாரணையை நேரடியாகக் கண்காணிப்பதற்காக அதிரடியாக கோவைக்கு வருகை தந்துள்ளார்.
கோவைக்கு விரைந்த டிஜிபி, சிறுமி கொலை செய்யப்பட்ட அந்தச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, சூலூர் காவல் நிலையத்திற்குச் சென்ற அவர், மேற்கு மண்டல உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் இந்த வழக்கு விசாரணை குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.
குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் போலீசாரின் விசாரணை தற்போது அசுர வேகம் எடுத்துள்ளது.
