கோவை அருகே கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் அவசர அவசரமாக அவரது சொந்த மாவட்டமான சேலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு முயன்று, சிறுமி சத்தம் போட்டதால் கொடூரமாகக் கொலை செய்து ஏரியில் வீசியுள்ளனர்.

இந்த வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும், சோகமும் நீடித்து வருகிறது.