மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) என்பவர் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஹோட்டலில் கேஷியராக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த இரண்டு பேர் பணம் கொடுக்காமல் பரோட்டா கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு ரமேஷ் பணம் கேட்டபோது தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து மிரட்டி பரோட்டாவை வாங்கிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ரமேஷ் அளித்த புகாரைத் தொடர்ந்து குற்றவாளிகள் ராஜேஷ் மற்றும் ஸ்ரீ வசந்த் என்ற இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பத்து ரூபாய் பரோட்டாக்காக பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி தற்போது இளைஞர்கள் ஜெயிலில் உள்ள சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்துகிறது.