தமிழக அரசியலில் “இரும்புப் பெண்மணி” என்று போற்றப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆவேசமான உரை அடங்கிய வீடியோ ஒன்று, தற்போதுள்ள அரசியல் சூழலில் சமூக வலைதளங்களில் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில், “பத்து கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்து என்னை எதிர்த்தாலும், நான் ஆண்டவனையும் மக்களையும் மட்டுமே நம்பி களம் காண்கிறேன். மக்கள் குரலே மகேசன் குரல்; மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்பதே எனது தாரக மந்திரம்” என்று அவர் கம்பீரமாக முழங்குகிறார். பலமான கூட்டணி இல்லாத போதும், மக்கள் சக்தி ஒன்றையே நம்பி அவர் பெற்ற வெற்றிகளை இந்த வீடியோ நினைவூட்டுகிறது.
தற்போது இந்த வீடியோவை தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், அக்கட்சியின் தலைவர் விஜய்யோடு ஒப்பிட்டு அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். விஜய்யும் தனது அரசியல் பயணத்தில் பெரிய கூட்டணிகளை எதிர்பார்க்காமல், “மக்களுடன் தான் என் கூட்டணி” என்று பேசி வருவதால், ஜெயலலிதாவின் அந்தத் துணிச்சலான பேச்சு விஜய்க்கும் அப்படியே பொருந்துவதாக அவர்கள் சிலாகிக்கின்றனர்.
அம்மா என்னும் ஆளுமை🦁❤️#InternationalWomensDay pic.twitter.com/RnkhoD98iC
— Dr. Ashif Shafi (@AshifShafii13) March 8, 2026
“>
“ஒரே ஒரு பெண் சிங்கமாக அன்று அவர் நின்றார், இன்று ஒரு மனிதனாக விஜய் நிற்கிறார்” என்ற வாசகங்களுடன் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
