இந்திய ரயில்வே துறையில் பணியாற்ற விரும்பும் வேலைவாய்ப்பு தேடுவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக, ரயில்வே தேர்வு ஆணையம் (RRB) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டிற்கான ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு இந்த முறையே மட்டும் 36 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தேர்வுகள் மற்றும் பணியிடங்கள் குறித்து ஏற்பட்ட தாமதத்தைக் கருத்தில் கொண்டு, வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இது வேலைவாய்ப்பு காத்திருக்கும் பலர் மத்தியில் பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 30,307 காலிப்பணியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 29 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பில் NTPC, Group D, ALP உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகின்றன. பொதுவாக 18 முதல் 33 வயது வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டிற்கே 36 வயது வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வயது: 18

அதிகபட்ச வயது (இந்த ஆண்டு மட்டும்): 36

கல்வித் தகுதி:

Group D – 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI

NTPC – பட்டம் பெற்றோர் / 12ம் வகுப்பு

இடஒதுக்கீடு பிரிவினருக்கு: அரசு விதிகளின்படி கூடுதல் தளர்வு வழங்கப்படும். இது இம்முறை மட்டும் வழங்கப்படும் தற்காலிக தளர்வாகும்.

விண்ணப்பதாரர்கள் RRB அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் படித்து தகுதிகள் மற்றும் வயது வரம்பை உறுதிப்படுத்த வேண்டும்.

RRB-யின் வெவ்வேறு மண்டலங்கள் சார்ந்த தேர்வுகள் தனித்தனியாக அறிவிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: www.rrbcdg.gov.in