தன்னிகரற்ற கலைஞனாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் கலாபவன் மணி மறைந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரது மகள் ஸ்ரீலட்சுமி தனது தந்தையின் நீண்ட கால கனவை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார்.

நகைச்சுவை, வில்லத்தனம் எனப் பல மொழிகளில் முத்திரை பதித்த மணி, கடந்த 2016-ல் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தான் ஒரு பெரிய நடிகனாக இருந்தாலும், தனது மகள் மருத்துவராகி ஏழை மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே மணியின் கடைசி ஆசையாக இருந்தது.

தந்தை மறைந்தபோது சிறுமியாக இருந்த ஸ்ரீலட்சுமி, அந்தத் துயரத்தையும் கடந்து இரவும் பகலுமாகப் படித்து இன்று மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.

தற்போது அவர் பயிற்சி மருத்துவராகப் பணியைத் தொடங்கியுள்ள தகவலை மணியின் சகோதரர் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். “அப்பாவின் ஆசையை ஸ்ரீலட்சுமி வாழ்ந்து காட்டுகிறார்” என ரசிகர்கள் இந்தச் செய்தியைக் கொண்டாடி வருகின்றனர்.