பாலிவுட்டின் ‘மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்’ என்று அழைக்கப்படும் நடிகர் அமீர் கான், சமீபத்தில் தனது மகன் ஜுனைத் கான் நடித்துள்ள ‘ஏக் தின்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் இடையே அமீர் கானுக்கு திடீரென இயற்கை உபாதை (Nature Call) ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் போனதால், அங்கிருந்த மைக்கை பிடித்து, “யார்… நான் ஒரு 2 நிமிஷத்துல வந்துடுறேனே?” என்று மிக வெளிப்படையாகக் கேட்டுவிட்டுச் சிறுநீர் கழிக்க விரைந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by buarazzi (@buarazzi)

ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்தும் எவ்வித தயக்கமும் இல்லாமல், கையின் சிறுவிரலைக் காட்டி சைகை செய்தபடி அவர் மேடையை விட்டு ஓடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள், “இவ்வளவு பெரிய ஸ்டார் இவ்வளவு எதார்த்தமாக இருக்கிறாரே” என பாராட்டி வருவதுடன், அந்த கலகலப்பான வீடியோவை பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.