சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலனியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகளும், ஒரு வயதில் இளமாறன் என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இளமாறன் கழிவறை பக்கத்தில் இருந்த தண்ணீர் வாளியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை வாளிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியது.

சிறிது நேரம் கழித்து மகனை தேடி வந்த அருண்குமாரின் மனைவி தனது குழந்தை தண்ணீர் வாளியில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் இளமாறன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை உயிரிழந்த 2 நாட்களுக்கு முன்பு தான் முதலாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது