சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சண்முகபுரம் அன்னை இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆகாஷ்(9), சைலேஷ்(4) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஆகாஷ் சண்முகபுரம் அரசு பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 13-ஆம் தேதி ஆகாஷ் தனது வீட்டு மாடியில் கரும்பை வைத்து விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது கரும்பு மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக உருசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 80 சதவீத தீக்காயத்துடன் ஊருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.