புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்த நாதபுரம் பகுதியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த யஸ்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங்கி லட்சுமி என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டில் சமையல் கியாஸ் அடுப்பில் இருந்த குழாயை பிடித்து இழுத்தது. இதனால் அடுப்பு விழுந்து பாத்திரத்தில் கொதித்து கொண்டிருந்த வெந்நீர் குழந்தை மீது கொட்டியது.

இதில் படுகாயமடைந்த குழந்தையை பெற்றோர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.