உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண், தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களால் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை (United Nations – UN) ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரம், குடும்ப வன்முறையின் தீவிரத்தையும், பெண்களின் பாதுகாப்பின்மையையும் வெளிப்படுத்துகிறது.
ஐ.நா.வின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 83,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில், 60% பேர் (50,000) தாய், தந்தை, சகோதரர்கள், மாமன் போன்ற நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம், கொலை செய்யப்படும் ஆண்களில் வெறும் 11% பேர் மட்டுமே குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார்கள் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த நிலை, பெண்கள் மீதான குடும்ப வன்முறையின் ஆழமான அபாயத்தை உணர்த்துகிறது.
