இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்துள்ளார். ‘சிங்கத்தின் கர்ஜனை’ என்ற ராணுவ நடவடிக்கையின் போது இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாக நெதன்யாகுவின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக, இஸ்ரேலின் புகழ்பெற்ற ‘அயர்ன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்புகளை இயக்குவதற்காக இஸ்ரேலியப் பணியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்பட்டதாக அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபீ தெரிவித்த மறுநாளே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தகவலை இஸ்ரேல் நேரடியாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு “வரலாற்றுத் திருப்புமுனை” என்று நெதன்யாகு அலுவலகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
