இயக்குனர் நாக் அஸ்வின் டைரக்டில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் “புராஜெக்ட் கே”. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். அதோடு அமிதாப் பச்சன், திஷா பதானி உட்பட பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இந்த நிலையில் புராஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகர் அமிதாப் பச்சன், வெல்கம் கமல் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் இணைந்தது பற்றி கமல் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் “50 வருடங்களுக்கு முன்பு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குனராகவும் இருந்த போது தயாரிப்புத் துறையில் அஸ்வினி தத் எனும் பெயர் மிகப் பெரிதாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு பின் தற்போது நாங்கள் இருவரும் இணைகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.