பாங்காக்கில் சரோன்பிதக் (62) என்பவர் தனிமையில் வசித்து வந்தார். இவர் வீட்டில் பலவிதமான நாய்களை வளர்த்து வந்துள்ளார். இவர் அடிக்கடி நாய்களுடன் வெளியே சென்று வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக அவரது கார் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது சரோன்பிதக் பிணமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து அவரது வீட்டில் இருந்த 28 நாய்கள் பல நாட்களாக பட்டினியாக கிடந்துள்ளதால் அவற்றில் பல சிஹுவாவா மற்றும் ஷிஹ் ட்ஸு இன நாய்கள் என்று கூறப்படுகிறது. அதிக பசியின் காரணமாக சரோன்பிதக் இறந்த பிறகு அந்த நாய்கள் அவரது இடது காலை கடித்து தின்று உயிர் பிழைத்துள்ளது. மேலும் அவர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இவரது வீட்டில் 30 நாய்கள் இருந்ததாகவும், அவற்றில் 2 பட்டினியால் இறந்து விட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
