உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஆசை ஆசையாய் திருமணம் முடித்த ஒரு புது மாப்பிள்ளைக்குத் தனது முதலிரவிலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. திருமணச் சடங்குகள் முடிந்து மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்குள் நுழைந்த கணவனிடம், அவரது மனைவி யாரும் எதிர்பார்க்காத ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
”நான் உன்னை காதலித்து திருமணம் செய்யவில்லை, பணத்திற்காகவே திருமணம் செய்தேன். என்னுடன் நீ உறவு கொள்ள வேண்டும் என்று விரும்பினால் எனக்கு ₹90 லட்சம் கொடுக்க வேண்டும்” என அந்தப் பெண் அதிரடியாகக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் எவ்வளவோ சமாதானம் பேசியும் அந்தப் பெண் கேட்கவில்லை. தற்போது இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. முதலிரவு அறைக்குள் புகுந்த பிரச்சனை எப்போது தீருமோ என அப்பகுதி மக்கள் வியப்புடன் பேசி வருகின்றனர்.
