டெல்லியின் நெரிசலான சந்தைகளில் ஷாப்பிங் செய்யும்போது பொருட்களைச் சுமந்து செல்வதைச் சுலபமாக்க ‘கேரிமென்’என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ₹149 என்ற கட்டணத்தில், ஷாப்பிங் செய்பவர்களின் பைகளைச் சுமந்து செல்லவும், உணவு வரிசையில் நிற்கவும், கார் பார்க்கிங் வரை பொருட்களைக் கொண்டு சேர்க்கவும் இந்த உதவியாளர்கள் உதவுகிறார்கள்.

மேலும் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்தச் சேவை சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. “இவர் உதவியாளர், காதலன் அல்ல” என சிலர் கிண்டலாகப் பதிலளித்தாலும், இது போன்ற கடின உழைப்பை நவீன கால அடிமைத்தனம் என்று ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில் அவர்கள் அதே வேளையில், தகுந்த ஊதியம் மற்றும் கண்ணியத்துடன் இந்த வேலை வழங்கப்பட்டால், மட்டும் இது வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள ஒரு புதிய வணிக முயற்சி என்றும் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.