ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2023 CB300l மோட்டார் சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து அதன் விலையை 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்தது. இந்த மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட 56 ஆயிரம் ரூபாய் குறைந்து இருக்கிறது. இந்நிலையில் டீலக்ஸ் மற்றும் டீலக்ஸ் ப்ரோ வேரியண்ட்களின் விலை 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.

தற்போதைய விலை குறைப்புக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் எந்த தகவலையும் அளிக்கவில்லை. எனினும் மோட்டார் சைக்கிள் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு விலை குறைக்கப் பட்டதாக தெரிகிறது. குறுகிய கால சலுகை ஆகவே இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மாடலில் 293.52 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஏபிஎஸ் ஆசிட், ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி லைட் மற்றும் டிஜிட்டல் கண்ட்ரோல் உள்ளது.