1955 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு 80களில் கலக்கிய புல்லட் 350 ராயல் என்பீல்ட் நிறுவனம் புது பொலிவுடன் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்தது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் புதிய புல்லட் 350 மாடல் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் மிக பிரபலமான மாடலாக புல்லட் இருந்து வருகிறது. இந்நிலையில் நவீன இன்ஜினில்  புதிய வடிவமைப்பில் தற்போது அறிமுகம் செய்துள்ள புல்லட் 350 மாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விலை 1.73 லட்சம் முதல் ஆரம்பமாகும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.