1955-ல் அறிமுகப்படுத்தப்பட்டு 80-களில் கலக்கிய புல்லட் – 350 ராயல் என்பீல்ட் நிறுவனம் புதுப்பொலிவுடன் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்தது. ராயல் என்பீல்ட் நிறுவனம் அதன் புதிய புல்லட் 350 மாடலை அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான மாடலாக புல்லட் இருந்து வருகிறது. இந்நிலையில், நவீன இன்ஜினில், புதிய வடிவமைப்பில் தற்போது அறிமுகம் செய்துள்ள ‘புல்லட் 350′ மாடல் இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விலை ரூ.1.73 லட்சம் முதல் ஆரம்பமாகும் என ராயல் என்பீல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.