முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி வி எஸ் மோட்டார்ஸ் மற்றொரு மின்சார ஸ்கூட்டர் டிவிஎஸ் எக்ஸ் என்ற வாகனத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள எக்ஸ் ஷோரூம் இல் இந்த பைக்கின் ஆரம்ப விலை 2.49 லட்சம் என்று டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 3.8 kWh பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் எனவும்  இது அதிகபட்சமாக மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.