புல்லட் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பைக் செப்டம்பர் 1ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புல்லட் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி ஹண்டர் 350 பைக் மாடலே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மலிவு விலை மோட்டார் சைக்கிள் மாடலாக உள்ளது.

இதைவிட கொஞ்சம் காஸ்ட்லியான பைக்காக புதிய தலைமுறை புல்லட் 350 விற்பனைக்கு வர இருக்கின்றது. ஹண்டர் 350 ரூ.1.5 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.