இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணி வகித்து வருகிறது. அவ்வகையில் ஒரு லட்சம் எலக்ட்ரிக் வாகன யூனிட்களை உற்பத்தி செய்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் 50,000 யூனிட்டுகள் கடந்த 9 மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன மாடல்கள்:

எலக்ட்ரிக் வாகனங்களில் அனைத்து விதமான மாடல்களிலும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம்தான் விற்பனை செய்கிறது. அவ்வகையில் செடான் பிரிவில் டிகோர் EV , ஹெச்பேக் பிரிவில் டியாகோ EV, எஸ்யுவி பிரிவில் நெக்சான் EV ஆகிய மாடல்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயார் செய்துள்ளது. அதேபோன்று டிகோர் EV மற்றும் எக்ஸ்பிரஸ் டி ஆகிய மாடலில் வாடகை கார் வெர்ஷனையும் விற்பனை செய்கிறது.

விலை விபரம்:

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தயார் செய்துள்ள எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைந்தது 8,69,000-ல் தொடங்கி அதிகபட்சமாக 19,29,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஸோரும் அடிப்படையில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் இலக்கு:

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 2028 ஆம் வருடத்தில் இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் தங்கள் நிறுவனத்தின் 10 லட்சம் யூனிட்டுகள் இடம்பெற்றிருக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது. மேலும் இந்த 10 லட்சத்தில் 20% யூனிட்டுகள் எலக்ட்ரிக் பவர்டிரெயின் உள்ளடக்கியிருக்கும் என்று தெரிவித்துள்ளது.