மகேந்திரா நிறுவனம் தார் SUV எலக்ட்ரிக் கான்செப்ட் மாடலை THAR-E என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய டீசரை ட்விட்டர் பக்கத்தில் மகேந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த டீசரில் சதுரங்க வடிவத்தில் எல்ஈடி லெம்ப்கள், மாற்றி அமைக்கப்பட்ட ஐசி இன்ஜின் வெர்ஷனின் எலக்ட்ரிக் வெர்ஷன் டெல்யி லெம்ப், THAR-E பேட்ச்சிங் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

மகேந்திராவின் BE RALL-E மாடல் போன்று இந்த THAR-E மாடலிலும் பேட்டரி 60 கிலோ வாட் ஹவர் திறன் கொண்டுள்ளது. மேலும் 4 வீல் டிரைவிங் வசதி, டூயல் மோட்டார் போன்றவைகளும் இதில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய THAR-E கான்செப்ட் மகேந்திரா நிறுவனத்தின் INGLO ஸ்கேட்போர்டு பிளாட்பாரத்தில் உருவாக்கப்படும். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் தார்-இ எலக்ட்ரிக் மாடலை போன்று தான் இந்த புதிய மாடலின் வெளிப்புற டிசைன்கள் அமைந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.