கவாஸ்கி நிறுவனம் இரண்டு புதிய எலக்ட்ரிக் பைக்குகள் பற்றிய தகவலை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி நிஞ்ஜா இ-1 மற்றும் Z இ-1 மாடல்களை கவாஸ்கி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடல்களின் விற்பனை தற்போதைக்கு சர்வதேச சந்தையில் மட்டும்தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்பது கிலோ வாட் மோட்டர் இரண்டு மாடல்களிலும் வழங்கப்பட்ட நிலையில் இவை மூன்று கிலோ வாட் ஹவர்  திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இரண்டு மாடல் எலக்ட்ரிக் பைக்கிலும் டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், ஸ்பிலிட் சீட்கள் மோனோஷாக் யூனிட், அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் TIT ஸ்கிரீன் இ-பூஸ்ட் ஆப்ஷன் போன்றவை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கவாஸ்கி நிறுவனம் இந்த இரண்டு எலக்ட்ரிக் பைக்குகள் மட்டுமல்லாது ஹைப்ரிட் பைக் ஒன்றையும் உருவாக்குவதாக தெரிவித்துள்ளது. அது நிஞ்சா 650 போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.