வால்வோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள இரண்டாவது எலக்ட்ரிக் கார் தான் C40 ரீசார்ஜ். ஏற்கனவே இந்நிறுவனத்தில் XC40 ரீசார்ஜ் மாடல் கார் இந்தியச் சந்தையில் விற்பனை செய்யப்படும் நிலையில் இந்த புதிய C40 ரீசார்ஜ் மாடல் கார் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த புதிய C40 ரீசார்ஜ் மாடலின் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மாடலில் 78 கிலோ வாட் ஹவர் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது .

டூயல் மோட்டார் செட்டப், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன், 19 இன்ச் அலாய் வீல்கள் பிளாஸ்டிக் கிளாடிங், ஸ்லோப்பிங் ரோப்லைன், எல்இடி ஹெட்லேம்ப்கள், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 360 டிகிரி கேமரா, ஒன்பது இன்ச் போர்டிரெயிட் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், பனோரோமிக் சன்ரூப் போன்ற சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது.

இந்த புதிய வால்வோ C40 ரீசார்ஜ் மாடலை ஒருமுறை முழு சார்ஜ் செய்து விட்டால் 418 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் வழங்கும் என்று சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் 150 கிலோவாட் அதிவேக சார்ஜர் மூலம் 27 நிமிடங்களில் செய்துவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.