கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு காதலனுடன் ஓட்டல் அறைக்குச் சென்ற மகளை, அவரது தாய் போலீஸாருடன் சென்று கையும் களவுமாகப் பிடித்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவில், ஓட்டல் அறை ஒன்றின் கதவு திறக்கப்படுகிறது. உள்ளே ஒரு இளம்பெண் தனது காதலனுடன் இருப்பதைக் கண்டு, அங்கிருந்த அவரது தாய் ஆத்திரமடைந்து மகளைச் சரமாரியாகத் திட்டுகிறார். மேலும், மகளையும் அந்த இளைஞனையும் அவர் தாக்கத் தொடங்குகிறார்.
உடனடியாக அங்கிருந்த பெண் போலீஸார் தலையிட்டு, ஆத்திரமடைந்த தாயைச் சமாதானம் செய்ய முயல்கின்றனர். கல்லூரிக்குச் செல்வதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு காதலனுடன் ஓட்டலுக்கு வந்ததால் இந்தத் தாய் இவ்வளவு ஆவேசமாக நடந்து கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ ‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. எனினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இணையவாசிகள் மத்தியில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
मां आई पुलिस लेकर होटल में बेटी कॉलेज जाने को बोलकर प्रेमी के साथ रंगे हाथ पकड़ाई pic.twitter.com/ZhZZpQcnu7
— ROHIT SINGH (@desHi__chora) April 16, 2026
பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டால் இப்படித்தான் நடக்கும்” என்று ஒரு தரப்பினர் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவில் இருப்பவர்களின் உடல்மொழியைப் பார்த்தால் இது உண்மையான சம்பவம் போலத் தெரியவில்லை. பார்வையாளர்களைக் கவர திட்டமிட்டு எடுக்கப்பட்ட நாடகம் போல உள்ளது என்று பல நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
இந்த வீடியோ உண்மையானதா அல்லது சமூக விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை. இருப்பினும், குடும்ப உறவுகளில் நிலவும் நம்பிக்கையின்மை மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் குறித்து இணையத்தில் பெரிய விவாதம் எழுந்துள்ளது.
