சமூக வலைதளங்களான எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராமில் கடந்த சில தினங்களாக ஒரு வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. டெல்லி – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH-48), வழிகாட்டி பலகை (Signboard) இருக்கும் மிக உயரமான இரும்புத் தூணில் மஹிந்திரா தார் கார் ஒன்று அப்படியே சிக்கித் தொங்குவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

காரின் வேகம் அதிகமாக இருந்ததால், அது அப்படியே பறந்து வந்து போர்டுக்குள் புகுந்துவிட்டதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது எப்படிச் சாத்தியம்?” என்று வாயடைத்துப் போயுள்ளனர்.

p>

ஆனால், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ததில் இது ஒரு முற்றிலும் பொய்யான வீடியோ என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வீடியோ ஆகும்.

அந்த வழிகாட்டி பலகையில் உள்ள எழுத்துகளை உற்று நோக்கினால், அவை தெளிவற்றும் இந்திய நெடுஞ்சாலை விதிகளுக்கு அப்பாற்பட்டும் இருப்பதை அறியலாம். மேலும், இவ்வளவு பெரிய விபத்து நடந்திருந்தால் போலீஸ் தரப்பிலோ அல்லது முன்னணி ஊடகங்களிலோ செய்தி வந்திருக்கும், ஆனால் அப்படி எந்த ஆதாரமும் இல்லை. எனவே, இணையத்தில் வைரலாகும் இந்த “பறக்கும் தார்” வீடியோவை உண்மை என்று நம்பிப் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.