உலகின் மிகப் பெரிய பாம்புகளான மலைப்பாம்பு அல்லது அனகோண்டாவைக் கண்டாலே அச்சத்தில் உறைந்து போகும் நிலையில், ராட்சத பாம்பு ஒன்றை ஒரு நபர் வாயால்  லாவகமாகப் பிடித்து பையில் அடைக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதாவது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ‘காகா பாய்’ என்பவர் பாம்புகளைப் பிடிப்பதில் வல்லவர். அண்மையில் அந்தப் பகுதியில் புகுந்த பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்றைப் பிடிக்க அவர் சென்றார். பொதுவாகப் பாம்புகளைப் பிடிக்கப் பாதுகாப்புக் கருவிகள் அல்லது நீண்ட குச்சிகளைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், காகா பாய் எவ்வித உபகரணமும் இன்றி வெறும் கைகளுடன் பாம்பின் அருகே சென்றார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சீறி வரும் ராட்சத பாம்பின் தலையை எவ்வித பயமும் இன்றி காகா பாய் ஒற்றைக்  வாயால் சட்டெனப் பிடிக்கிறார். பாம்பு எதிர்வினையாற்றுவதற்குள் மின்னல் வேகத்தில் அதன் தலையைத் தனது உள்ளங்கைக்குள் கொண்டு வருகிறார்.

பின்னர், ஒரு சிறிய குழந்தையுடன் விளையாடுவது போல அந்தப் பாம்பை மிகச் சாதாரணமாகக் கையாண்டு, தரையில் வைத்து லாவகமாக ஒரு பையினுள் அடைக்கிறார். அவர் பாம்பைப் பிடித்த விதம், ஏதோ ஒரு பொம்மையுடன் விளையாடுவது போல இருந்ததாக நெட்டிசன்கள் வியப்பு தெரிவித்து வருகின்றனர்.

மலைப்பாம்புகள் விஷமற்றவை என்றாலும், அவை மனிதர்களை நெரித்துக் கொல்லும் வலிமை கொண்டவை. அப்படிப்பட்ட ஆபத்தான உயிரினத்தை எவ்வித பதற்றமும் இன்றிப் பிடித்த காகா பாயின் துணிச்சலைப் பலரும் பாராட்டி வந்தாலும், இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.