ராஜஸ்தானில் புதுமணத் தம்பதி ஆஷிஷ் மற்றும் அஞ்சு வாக்கிங் சென்றபோது நடந்த விபத்து, தற்போது நாட்டை உலுக்கும் ஒரு கொடூரக் கொலையாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் ஆஷிஷ் வாகன விபத்தில் பலியானதாகவும், அஞ்சுவின் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகவும் நாடகமாடப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஆஷிஷ் திட்டமிட்டு கொல்லப்பட்டது உறுதியானதை அடுத்து, போலீசார் அஞ்சுவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அஞ்சு தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்தது அம்பலமானது.

​இந்தச் சம்பவம் ஏற்கனவே மேகாலயாவில் நடந்த புகழ்பெற்ற ‘ஹனிமூன் கொலை’ வழக்கை நினைவூட்டுவதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர். காதலனுக்காகத் தாலி கட்டிய கணவனையே தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான சில நாட்களிலேயே ஆசையாகப் பழகிவிட்டு, பின்னாடியே இருந்து ஸ்கெட்ச் போட்டு அஞ்சு செய்த இந்த துரோகம் சமூக வலைதளங்களில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.