இந்தியாவில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது தாய்நாட்டை விட இந்தியா எந்தெந்த விஷயங்களில் சிறந்து விளங்குகிறது என்பது குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவில் நிலவும் கூட்டுறவு மனப்பான்மை மற்றும் சமூக ஒற்றுமை பிரான்ஸை விட மிகச் சிறப்பாக இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.
View this post on Instagram
பிரான்ஸ் மக்கள் தனிமனித சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்றும், ஆனால் இந்தியாவில் அனைவரும் ஒரு பெரிய குடும்பத்தைப் போல ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ்வது தமக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் இயற்கை சூழல் மற்றும் ஜவுளித் தொழில் குறித்தும் அந்தப் பெண் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாலைவனம், மலைகள், காடுகள் எனப் பன்முகத்தன்மை கொண்ட இயற்கை அமைப்பு இந்தியாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியுள்ள அவர், இந்திய ஆடைகளின் வேலைப்பாடுகள் தன்னை வியக்க வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் அதிக விலைக்கு விற்கப்படும் உயர்தர ஆடைகளுக்கு இணையான நுணுக்கமான தையல் மற்றும் கலை வேலைப்பாடுகள், இந்தியாவில் சாதாரண ஆடைகளிலேயே காணப்படுவதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு இந்திய நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
