பெங்களூருவில் பெட்ரோல் தீர்ந்து தவித்த ஒரு குடும்பத்திற்கு ஸ்விக்கி டெலிவரி ஊழியர் செய்த உதவி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் அனில் சாஹு என்ற ஊழியர் தனது டெலிவரி பணிக்காகச் சென்றபோது, சாலையோரம் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பைக்கை தள்ளிக்கொண்டு செல்வதைக் கண்டார்.

அவர்களிடம் விசாரித்தபோது பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் அவர்கள் தவிப்பது தெரியவந்தது. உடனே அனில் சாஹு தன்னிடம் இருந்த சிறிதளவு பெட்ரோலை அவர்களுக்குக் கொடுத்து தாராளமாக உதவி செய்தார்.

இந்த உதவிக்கு அந்த நபர் பணம் கொடுக்க முன்வந்தபோது, அனில் அதனை வாங்க மறுத்துவிட்டார். “இது வெறும் உதவிதான், பணம் வேண்டாம்” என்று அவர் அன்புடன் கூறி அங்கிருந்து நகர்ந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Anil Kumar (@anilsahu296)

“>

கஷ்டத்தில் இருந்த குடும்பத்திற்கு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அவர் செய்த இந்த நெகிழ்ச்சியான செயல் வீடியோவாக வெளியாகி, தற்போது லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று வருகிறது.