நாடு முழுவதும் மத்திய அரசு உதவியுடன் மாநில அரசுகள் மின் இணைப்புகளின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் தற்போது ஸ்டேடிக் எனப்படும் டிஜிட்டல் அளவீடு முறை அமலில் உள்ள நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் படி மின்வாரிய சர்வருடன் இணைக்கப்படுவதால் இரு மாதங்களுக்கு ஒரு முறை தானாகவே மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும்.

இது பயனாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக மின் கட்டணத்தை தெரிவித்து விடும் எனவும் மின்கட்டணம் செலுத்தாமல் இருந்தால் மின் இணைப்பு தானாக துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் அமலுக்கு வந்தால் தமிழ்நாடு மின்வாரியத்தில் பதினைந்தாயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவை போல தமிழகத்திலும் அரசை இந்த ஊழியர்களின் வேலைக்கு உத்திரவாதம் வழங்க வேண்டும் என தற்போது கோரிக்கை இழந்துள்ளது.