இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மையமாகிவிட்டது. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைவரும் கையடக்க ஸ்மார்ட்போன்கள் மூலம் வேலையை முடித்து விடுகின்றனர். எந்த அளவிற்கு வசதிகள் அனைத்தும் எளிமையாக கிடைக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்துகளும் அதிகமாக உள்ளன. அதாவது நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்கள் மூலம் பல வகையான மோசடிகள் நடைபெறுகிறது. இந்த மோசடிகளை தடுக்கும் வகையில் BeVigil என்ற செயலி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் டேட்டா திருட்டு போன்ற மோசடியில் ஈடுபடும் செயலிகளை கண்டறிய இந்த செயலி உதவும் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த செயலி பயனர்கள் உபயோகிக்கும் மற்ற செயல்களின் பாதுகாப்பு தன்மை மற்றும் பயனர்களின் தரவு சேகரிப்பு குறித்த விரிவான தகவல்களை பதிவு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மோசடிகளில் இருந்து தப்பிக்க இந்த செயலி பெரும் உதவியாக இருக்கும்.