திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாரிவட்டம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஷ்(13) அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் லோகேஷ் ரிப்பேரான ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று லோகேஷன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.