திருச்சி மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலணியில் விவசாயியான செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு செல்லதுரையின் தந்தை ராமையா உயிரிழந்தார். இந்நிலையில் செல்லதுரை தனது தந்தை பெயரில் இருக்கும் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தேவனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அதிகாரி விஸ்வநாத் என்பவர் 4000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சீக்கிரமாக பட்டா பெயர் மாற்றி தருகிறேன் என செல்லதுரையிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து செல்லதுரை திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்லதுரை விஸ்வநாத்திடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஸ்வநாத்தை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.