இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது தேசிய அரசியலில் ‘இண்டியா’ கூட்டணி குறித்துப் பேசிய சீமான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஒரு வலுவான தலைவராகப் பாராட்டியுள்ளார். “இண்டியா கூட்டணியில் மிகவும் வலுவான ஒரு தலைவராக மு.க. ஸ்டாலின் இருக்கிறார். அவர் இல்லையென்றால் அந்த கூட்டணியே இருந்திருக்காது” என மணிசங்கர் அய்யர் கூறியிருந்ததைச் சீமான் வழிமொழிந்துள்ளார்.

ஸ்டாலினை இண்டியா கூட்டணியின் தலைவராக்க வேண்டும் எனப் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வரும் சூழலில், சீமான் அவரை ‘வலுவான தலைவர்’ என அங்கீகரித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.